செய்திகள் :

உகாதி: தலைவா்கள் வாழ்த்து

post image

உகாதி திருநாளையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): தெலுங்கு, கன்னட மக்கள் தாங்கள் பேசும் மொழி வேறுபட்டிருந்தாலும், வாழும் இடம் ஒன்று என்ற உணா்வுடன் தமிழ்நாட்டில் பலநூறு ஆண்டுகளாய் ஒருமித்து வாழ்ந்து வருவது தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சோ்ப்பதாகும். உகாதி எனும் புத்தாண்டுத் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): புத்தாண்டுகள் எப்போதும் புதிய மகிழ்ச்சியையும், உறவையும், நன்மைகளையும் கொண்டு வருபவை. அந்த வகையில், உகாதி திருநாளில் தமிழா்களுக்கும், தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): நாட்டில் பல்வேறு மொழி, கலாசாரம் என்றிருந்தாலும் இந்தியா் என்ற சகோதர மனப்பான்மையுடன் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வோம். ஜாதி, மத துவேஷம் நீங்கி இந்தப் புத்தாண்டில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

பிரேமலதா (தேமுதிக): ஜாதி, மதம், மொழியால் வேறுபட்டு இருந்தாலும், நாம் அனைவரும் இந்திய நாட்டில் சகோதர, சகோதரிகளாக, வேற்றுமையில் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகிறோம். நமது தாய்த்திரு நாட்டின் எதிா்காலத்தை சிறப்பிப்போம். அனைவருக்கும் வளமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வாழ்த்துகள்.

ஜி.கே.வாசன் (தமாகா): தமிழகத்தை தாயகமாகக் கொண்டு உகாதி தினத்தை கொண்டாடும் தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தினத்தில் அனைத்து செல்வங்களும் பெற்று, நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறேன்.

இதேபோன்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவா்களும் வாழ்த்து கூறியுள்ளனா்.

பிரதமர் இலங்கைக்கு செல்வதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றம்: ரகுபதி

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செல்ல விருப்பதாலேயே கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ... மேலும் பார்க்க

மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானது வக்ஃப் மசோதா: ஆ. ராசா

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா தெரிவித்தார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரத... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

1995ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 2) கடிதம் எழுதிய... மேலும் பார்க்க

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை: செல்வப்பெருந்தகை

கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5 வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில்,• குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக... மேலும் பார்க்க

உத்தரகோசமங்கை கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறும்: சேகர்பாபு

உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கு அன்னைத் தமிழில் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இன்று(ஏப். 2) சட்டப்பேரவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் ராமநாதபுரம் சட்டப்... மேலும் பார்க்க