செய்திகள் :

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

post image

உக்ரைன் போருக்கு முடிவு எட்டப்படுவது குறித்து மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று(ஆக. 18) நள்ளிரவில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அமெரிக்க, உக்ரைன், ஐரோப்பிய தலைவர்கள் இன்று சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

யார் யார் பங்கேற்கிறார்கள்?

வெள்ளை மாளிகையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் முதலில் இருதரப்பு ஆலோசனையில் பங்கேற்கிறார் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி. இந்தச் சந்திப்பு ஆக. 18 இரவு 11.30 மணிக்கு தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த ஆலோசனைக்குப்பின், பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் பிரைடுரிச் மெர்ஸ், பின்லாந்து அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்டப், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வோன் டெர் லெயென், நேட்டோ கூட்டமைப்பின் தலைவர் மார்க் ரூட் ஆகியோரை டிரம்ப் வரவேற்று அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த ஆலோசனை தொடங்குகிறது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஸெலென்ஸ்கி - டிரப்பு இடையிலான பேச்சுவார்த்தை படுதோல்வியில் முடிந்தது. இதன் எதிரொலியாக, சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை இந்தப் பேச்சுவார்த்தை பாதிக்கவும் தவறவில்லை.

இதைக் கருத்திற்கொண்டு, உக்ரைன் - ரஷியா இடையிலான மோதல் போக்கு விவகாரத்தில் இம்முறை சுமூக முடிவு எட்டப்படுவதை உறுதிசெய்ய உக்ரைன், அமெரிக்க அதிபர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Trump-Zelensky meeting : Will there be a change of stance today?

போயிங் விமானத்தில் தீ விபத்து! நூலிழையில் தப்பிய 280 பேர்!

கிரீஸ் நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்த போயிங் 757 ரக விமானம், புறப்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் நடுவானில் அதன் வலதுபுற என்ஜினில் திடீரென தீப்பற்றி எரிந்து விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, ... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு வரி; ஆனால் சீனாவுக்கு இல்லை! அமெரிக்கா விளக்கம்!

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீது கூடுதல் வரி விதிக்கப்படாதது குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீதான கூடுதல் வரி விதிப்பின்மை குறித்து அமெரிக்க... மேலும் பார்க்க

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

அமெரிக்காவில் சாலையில் டிரக்கை தவறுதலாக திருப்பி, விபத்தை ஏற்படுத்திய சீக்கியரால் சர்ச்சையாகியுள்ளது.அமெரிக்காவில் ஃபுளோரிடா மாகாணத்தில் செயின்ட் லூசி கவுன்டி சாலையில் டிரக்கை ஓட்டிச் சென்ற இந்திய வம்... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பலியாகியுள்ளனர். சொஹொடா மாகாணம் கடா கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் நேற்று பிற்பகல் ஆற்றில் படகு மூலம் கொரொன்யா ப... மேலும் பார்க்க

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை! நடந்தது என்ன?

கலிஃபோரனியாவைச் சேர்ந்த குழந்தைகள் பராமரிப்பு மைய ஊழியர் பிரிட்னி மே லையோன் என்ற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை! டிரம்ப் அறிவிப்பு

உக்ரைனுக்கு நேட்டோவில் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவின் அலஸ்காவில் டிரம்பை நேரில் சந்தித்து ரஷிய அத... மேலும் பார்க்க