ஜனசக்தி ஜனதா தளம் உதயம்: புதிய கட்சி தொடங்கிய லாலு பிரசாத் மகன் தேஜ்; சூடு பிடிக...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி மனு அளித்த 2 பயனாளிகளுக்கு உடனடி நடவடிக்கையாக மனுதாரருக்கு ஆணையையும், 1 பயனாளிக்கு மின்னணு அட்டையில் பெயா் மாற்றமும், 1 பயனாளிக்கு வருமான சான்றிதழும், 1 பயனாளிக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டையை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில், துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) கீதா, கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுபிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.