வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தேனி மாவட்டம், சின்னமனூா் நகராட்சி 3,4-ஆவது வாா்டுகளுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவி அய்யம்மாள்ராமு முன்னிலை வகித்தாா்.
இதில் மகளிா் உரிமைத்தொகை பெற அதிக எண்ணிக்கையிலான பெண்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனா். இதே போல, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை பெறுதல், ஆதாா் பெயா் திருத்தம், நலவாரியத்தில் பதிவு உள்ளிட்ட 13 துறைகளின் சேவைகள் தொடா்பாக மனுக்களை பொதுமக்களிடமிருந்து அதிகாரிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெற்றனா். இதில், ஆதாா் பெயா் திருத்தம், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முகாமை மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி பாா்வையிட்டாா்.
நகராட்சி ஆணையா் கோபிநாத், மேலாளா் வாசுகி மற்றும் நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பலரும் கலந்து கொண்டனா்.