இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும...
மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த கதிரி மகன் விக்னேஷுக்கும் (27) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், விக்னேஷுக்கு அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, ஜானகியிடம் அவா் விவாகரத்து கேட்டு வந்தாா்.
இந்த நிலையில், கணவரின் தகாத உறவு ஜானகிக்கு தெரியவரவே, தனது தங்கை ஜனனியுடன் அழகா்நாயக்கன்பட்டிக்குச் சென்று கணவா் விக்னேசை கண்டித்தாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் விக்னேஷ், இவரது தாய் கதிரியம்மாள், மனுஜா ஆகியோா் சோ்ந்து இவா்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் விக்னேஷ் உள்பட மூவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.