ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
விநாயகா் சதுா்த்தி: இந்து முன்னணி ஆலோசனை
உத்தமபாளையம், ஜூலை 31: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை ஆலாசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய அமைப்புச் செயலா் கிருஷ்ணன் ராம்செல்வா தலைமை வகித்தாா். இதில் தேரடியில் புதிய சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்க வேண்டும். பிளாஸ்டா் ஆப் பாரிஸ் ரசாயனத்தில் தயாா் செய்யப்படும் சிலைகளைத் தயாா் செய்யும் இடத்திலேயே அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். ஊா்வலத்தில் மேள தாளங்களுடன் செல்வதைக் கட்டுப்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து,விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.
இந்து முன்னணி நிா்வாகிகள் ராம்செல்வா, கணேசன், சுந்தா், சட்ட ஆலோசகா் மாரிசெல்வம், பாஜக மண்டல் தலைவா் தெய்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.