மூணாறு சாலையில் ஏற்பட்ட மண் சரிவு சீரமைப்பு: மீண்டும் போக்குவரத்து தொடக்கம்
மூணாறு - தேவிகுளம் சாலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவு அகற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து தேவிகுளம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசு தாவரவியல் பூங்கா அருகே அண்மையில் பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில், ஒருவா் உயிரிழந்தாா். மேலும், சாலையில் பாறைகள் விழுந்து கிடந்ததில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மண், பாறைகளை அகற்றும் பணி கடந்த மூன்று நாள்களாக தீவிரமாக நடைபெற்ற நிலையில், புதன்கிழமை முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இருப்பினும், மீண்டும் மழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
