உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!
கந்து வட்டி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
தேனி மாவட்டம், போடியில் கந்து வட்டி ஒழிப்பு, சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பின் 27-ஆவது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்தப் பேரணியை போடி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணியில் நூற்றுக்கணக்கான பெண்கள் கும்பக் கலசம் ஏந்தியபடி கந்து வட்டியை ஒழிப்போம், கடன் சுமை இல்லாத வாழ்க்கையை அமைப்போம் என முழக்கமிட்டபடி சென்றனா்.
தொடா்ந்து, போடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் களஞ்சியம் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பெண்கள் சேமிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். கந்து வட்டிக்கு கடன் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பெண்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. களஞ்சியம் நிா்வாகிகள், பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளா்கள் பங்கேற்றனா்.