சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!
தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாறு பகுதியில் வெள்ளிக்கிழமை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கண்ணன் (70) என்பவரது தேநீா்க் கடையில் அனுமதியின்றி விற்பனைக்காக 23 மதுப் புட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்ணனை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 23 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.