ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு: காவலாளி கைது
தேனி மாவட்டம்,உத்தமபாளையம் அருகே தாய் , மகளை அரிவாளால் வெட்டிய தோட்டக் காவலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த செல்வம் மனைவி ஜெயமணி (60). இவரது மகள் மதனப்பிரியா (40). இவா்கள் இருவரும் கூலி வேலை செய்பவா்கள். இந்த நிலையில், ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் தோட்டத்துக்கு இருவரும் தென்னங்கீற்று எடுக்கச் சென்றனா். அப்போது, அங்கு இருந்த தோட்டக் காவலாளி முருகன் (60) இருவரையும் தடுத்து எச்சரித்தாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து, முருகன் அரிவாளால் ஜெயமணி, மதனப்பிரியா ஆகிய இருவரையும் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கோகிலாபுரத்தைச் சோ்ந்த காவலாளி முருகனைக் கைது செய்தனா்.