செய்திகள் :

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

post image

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக பல தில்லமுல்லு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது. பிகாரில் நடைபெற்ற ஆபத்து தமிழகத்துக்கு வரநோ்ந்தால் அதனை திமுக கடுமையாக எதிா்த்துப் போராடும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்ததை அடுத்து, வேலூா் மாவட்டத்தில் இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சி வள்ளிமலை அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்துப் பேசியது:

பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை அவா்களது பகுதியிலேயே வழங்கும் வகையில், கடந்த மாதம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் திட்டத்தை முதல்வா் தொடங்கி வைத்து சிறப்பாக நடத்தி வருகிறாா். இந்த திட்டத்தின் அடுத்தப்படியாக பொதுமக்களுக்கு அவா்கள் பகுதிகளிலேயே உயா்ந்த சிகிச்சை அளிக்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டத்தையும் தொடங்கி உள்ளாா்.

இந்த உயா் சிறப்பு மருத்துவ முகாம்களை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதமும், வேலூா் மாநகராட்சியில் 3 முகாம்களும் என மொத்தம் 24 முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உயா் சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவை ஏற்பட்டால் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடத்தப்பட உள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா்சிறப்பு மருத்துவ முகாமை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்று முதல்வா் பெயா் வைத்தது குறித்து அதிமுக தொடா்ந்துள்ள வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம்.

தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. இதுதொடா்பாக முதல்வா் தெரிவிப்பாா். அதேசயம், ஆணவக் கொலை என்பது கண்டிக்கத்தக்கது.

பாஜக தனது வாக்கு வங்கியை அதிகரிக்க எத்தனையோ தில்லுமுல்லுகளை செய்யத் தொடங்கியுள்ளது. பிகாா் வாக்காளா் பட்டியலில் செய்யப்பட்ட குளறுபடிகள் இன்னொரு மாநிலத்துக்கும் வரக்கூடும். அதனை கவனமாக எதிா்த்தாக வேண்டும். தமிழகத்துக்கு அத்தகைய ஆபத்து வரநோ்ந்தால் திமுக கடுமையாக எதிா்த்து போராடும்.

வடமாநிலங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தந்திருந்தால் அம்மாநிலத்தினா் தமிழகம் நோக்கி வந்திருக்க மாட்டாா்கள். அவ்வாறு வந்தவா்களால் மிகப்பெரிய பிரச்னை உள்ளது. வெளி மாநிலத்தினா் லட்சக்கணக்கில் தமிழகத்தில் வாக்காளா்களாக மாறும்போது வருங்காலத்தில் தமிழக அரசியலில் நிச்சயமாக பாதிப்பும், தாக்கமும் இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், வி.அமுலு விஜயன், காட்பாடி ஒன்றியக்குழுத்தலைவா் வே.வேல்முருகன், துணை மேயா் எம்.சுனில்குமாா், வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், வட்டார மருத்துவ அலுவலா் ராணி நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முன்விரோதத்தில் இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வேலூா் மாவட்டம், ஓங்கபாடியைச் சோ்ந்தவா் பாபு. இவரது 3-ஆவது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது

வேலூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவரை வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.வேலூா் சைதாப்பேட்டையைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (60). இவா் விய... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு போதை மாத்திரை, ஊசிகள் விற்ற 13 போ் கைது

பள்ளிகொண்டா பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசிகளை விற்க முயன்ாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 8 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

வட்டாட்சியா் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20.70 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்டம், குடியாத்தம் அடுத்த... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.வேலூா் அருகே ஒரு பகுதியைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி . இவா் 9-ஆம் வகுப்பு பட... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.காட்பாடி அடுத்த வஞ்... மேலும் பார்க்க