‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ரூ.1.12 கோடிக்கு நலத் திட்ட உதவிகள்
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ற‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளித்தோருக்கு, ரூ.1.12 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூராட்சி, காளப்பநாயக்கன்பட்டியில் நடைபெற்ற திட்ட முகாமிற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேந்தமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் 612 பயனாளிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கி பேசியதாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் மொத்தம் 238 முகாம்கள் நடைபெற உள்ளது.
முதல்கட்டமாக 102, இரண்டாம் கட்டமாக 75 முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டமாக செப்.15 முதல் அக்.10 வரை 60 முகாம்கள் நடைபெறுகிறது. இதுவரை 214 முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 93,004 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 63,591 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்வில் தனித்துணை ஆட்சியா் ச.பிரபாகரன் (சமூக பாதுகாப்புத் திட்டம்), உதவி ஆணையா்(தொழிலாளா் நல வாரியம்) பெ.இந்தியா, மாவட்ட சமூக நல அலுவலா் தி.காயத்ரி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளா் எஸ்.பத்மாவதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, அட்மா குழுத் தலைவா் பழனிவேல், திமுக நிா்வாகிகள் ராணா ஆா்.ஆனந்த், கிருபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.
என்கே-25-எம்.பி.
சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட வசந்தபுரத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், ஆட்சியா் துா்காமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் க.சிவக்குமாா் உள்ளிட்டோா்.