செய்திகள் :

``உடனடியாக ஆளுநர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்" - கொதிக்கும் வைகோ

post image

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து வந்த மோதல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆளுநரின் செயல்பாடுகள் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருக்கிறது.

இந்த நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப் பட்ட மனுவில், “தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளார்.

ஆளுநர் ரவி | உச்ச நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராததின் மூலம் சட்டமன்றம் தனது கடமைகளைச் செய்ய ஆளுநர் தடுக்கிறார். ஆளுநரின் செயல்பாடுகளால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அரசமைப்பு சட்டத்தின் செயல்பாட்டுக்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது மட்டுமின்றி ஊழல் வழக்குகள் தொடர அனுமதி தருவதிலும் ஆளுநர் தாமதம் செய்கிறார்.

இதன்மூலம் அரசியலமைப்பு சட்டப்படி ஆற்ற வேண்டிய பணிகளைத் தமிழக ஆளுநர் நிறைவேற்றவில்லை. மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஒப்புதல் தரத் தாமதிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. ஆளுநரின் இத்தகைய செயல் சட்டப்படி தவறு.

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததின் மூலம் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஆளுநரின் இத்தகைய செயல் தன்னிச்சையானது மற்றும் அர்த்தமற்ற செயல் ஆகும். ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் எதிரி போல் செயல்படுகிறார்.

சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வைகோ
வைகோ

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது.

குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம் , இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு அன்றே ஒப்புதல் அளித்திருக்க வேண்டும், குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைத்தது சட்டவிரோதம் என்றும், ஜனாதிபதிக்கு 10 மசோதாக்களை ஆளுநர் அனுப்பி வைத்தது செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என்றும், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை, ஆளுநருக்கு என தனிப்பட்ட (VETO) அதிகாரங்கள் இல்லை, ஆளுநர் மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

ஆளுநர் ரவி

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், ஆளுநர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து கொண்டு ஆளுநர் ஆர் என் ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஆளுநர் பதவியில் நீடிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார். உடனடியாக அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``உணவின் மூலமே உங்கள் கல்லீரலை நலமாக வைத்திருக்கலாம்!'' - விளக்கும் மருத்துவர் | World Liver Day

உங்கள் உடலுக்குள் இருக்கிற ஓர் உற்ற தோழமை யார் தெரியுமா? கல்லீரல் என்கிற லிவர் தான் அது. இதயம், மூளை, நுரையீரல் போலவே நம் உடலின் மிக மிக முக்கியமான உறுப்பு. நாம் சாப்பிடும் உணவுகளை செரிக்க பித்த நீரை ... மேலும் பார்க்க

`தெர்மாகோல், பிளாஸ்டிக் இல்லை..' மாற்றி யோசித்த பள்ளி; அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளி தான் பாரதியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, இந்த பள்ளியில் கடந்த மார்ச் 29 -ல் "manifest" என்கிற பெயரில் அறிவியல் கண்கா... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் கெட்ட வாடை.. மருத்துவ சிகிச்சை தேவையா?

Doctor Vikatan:என்னால் சிறிய அளவிலான துர்நாற்றத்தைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை. எப்போதும் என்னைச் சுற்றி ஏதேனும் நறுமணம் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். வீட்டினுள் ரூம் ஸ்பிரே, ஊதுவத்தி, சாம்பி... மேலும் பார்க்க

``சீனா உடன் ஒப்பந்தம்; பேச்சுவார்த்தைக்கு தயார்'' - இறங்கி வந்த ட்ரம்ப்.. கண்டிஷன் போட்ட சீனா

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் வரி பிரச்னை உலகறிந்தது.'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தூதை ஒருவழியாக சீனா ஏற்றுக்கொண்டது.நேற்று, சீனாவின் வர்த்தக அமைச்சகம்,... மேலும் பார்க்க

``ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு'' - கரூரில் விசிக ஒட்டிய பரபர போஸ்டர்; நிர்வாகிகள் சொல்வதென்ன?

நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியபோது, 'ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு' என்பதை கொள்கையாக அறிவித்த நிலையில், அந்த பாயிண்டை வைத்து, 'எங்களுக்கும் பங்கு வேண்டும்' என்று பிரதான அரசியல் கட்சிகளோடு... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் வெயில், அம்மை நோய் பாதிப்பு வராமல் தடுக்க என்ன வழி?

Doctor Vikatan: அக்கம்பக்கத்தினர், தெரிந்தவர்கள் என பலரின் வீடுகளிலும்யாரோ ஒருவருக்கு அம்மை பாதித்திருப்பதைக்கேள்விப்படுகிறோம். அம்மை நோய் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக ஏதேனும் செய்ய முடியுமா?பதில... மேலும் பார்க்க