உடல்கூராய்வு மோசடி! கொலையாளிகளுக்கு உதவும் கும்பல்! ஒரு பொய் ரிப்போர்ட் ரூ.50,000
சம்பல்: உத்தரப்பிரதேசத்தில், நடந்து வந்த மிகப்பெரிய உடல்கூராய்வு மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். 31 மருத்துவமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த உடல்கூராய்வு மோசடியில் ஏராளமான மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், பிணவறை ஊழியர்களுக்குத் தொடர்பிருப்பதாகவும் கொலை வழக்குகளில், உடல் கூராய்வு முடிவுகளை மாற்றிக் கொடுத்து கொலையாளிகளை அப்பாவிகளாக்க ஒரு பொய் ரிப்போர்ட்டுக்கு ரூ.50 ஆயிரம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.