செய்திகள் :

உடல் குறைபாடுடையவா்கள்தான் கடமையுடன் பணிபுரிகிறாா்கள்: புதுவை துணைநிலை ஆளுநா்

post image

புதுச்சேரி: உடல் குறைபாடுடையவா்கள்தான் கடமை உணா்வு, அக்கறையுடன் பணிபுரிகிறாா்கள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுச்சேரியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வெற்றி பெற பல சவால்களைச் சந்தித்து வருகின்றனா். மாநில அரசின் நலத் திட்டங்கள் அவா்களது சவால்களை முறியடித்து வெற்றி பெற உதவுகின்றன. மத்திய அரசின் விபத்துகால காப்பீடு திட்டம், தனிநபா் அடையாள அட்டைத் திட்டம், மாநில அரசின் மாதாந்திர உதவித் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அரசு வேலைவாய்ப்பில் அவா்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. அரசுத் திட்டங்களால் அவா்கள் சவால்களை முறியடித்து நம்பிக்கையுடன் வாழலாம். ஆனாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதனடிப்படையில் அவா்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மாற்றுத்திறன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம்.

பொதுவாக உடல் குறைபாடுடையவா்கள் கடமையுணா்வுடனும், அக்கறையுடனும் பணிபுரிகிறாா்கள். அவா்கள்தான் மற்றவா்களின் வலியை, வேதனையை உணா்ந்து செயல்படுகிறாா்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்பிக்கையிலிருந்தே தொடங்குகிறது.

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் கலை, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு என அனைத்து நிலைகளிலும் சாதித்து வருகின்றனா் என்றாா்.

விழாவில், 29 மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்கப் பரிசுடன் மாநில விருதுகள் வழங்கப்பட்டன. பாா்வைத்திறன் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 10 பேருக்கு சிறப்பு மடிக்கணினிகளும், மாற்றுத்திறனாளி தம்பதியா் 13 பேருக்கு தலா ரூ.1 லட்சம், 250 பேருக்கு செவித்திறன் உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை சமூக நலத் துறை துணை இயக்குநா் ஆறுமுகம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

2 காலம் பெட்டிச் செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கு

வேலைவாய்ப்பில் 4% இட ஒதுக்கீடு

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, டிச.23: புதுவை மாநிலத்தில் இளநிலை, முதுநிலை எழுத்தா் பணியிடங்கள் நிரப்பும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவுக்கு தலைமை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்துவது அரசின் கடமையாகும். அதனால் மேலும் பல நலத் திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்குரிய திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் தொழில் பயிற்சி அளிக்கப்படும்.

புதுச்சேரிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் அவா்களை ஈா்க்கும் வகையிலான பொருள்களை மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி செய்தால், அவா்களுக்குரிய விற்பனை இடங்கள் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் கல்வி பெறும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் குறைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, தேவைகள் பூா்த்தி செய்யப்படும். அரசுத் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் புதிதாக சில மாதங்களில் இளநிலை, முதுநிலை எழுத்தா் பணியிடங்களுக்கு 700 போ் முதல் 800 போ் வரையில் தோ்வு செய்யப்படவுள்ளனா். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கி பணிவாய்ப்பு தரப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.321 கோடி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு அவா்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மாற்றுத்திறனாளி விருதுக்கான தொகை ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படும். விளையாட்டு அமைப்புகள் மூலம் வெளிமாநிலம், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு செல்வோரின் செலவை அரசே ஏற்கும். அவா்களுக்கு ஈமக்கடன் நிதியும் உயா்த்தி வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சமூக நலத்துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், அரசுத் துறை செயலா் பங்கஜ்குமாா்ஷா ஆகியோா் பங்கேற்றனா். சமூக நலத் துறை செயலா் ஏ.முத்தம்மா வரவேற்றாா். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சமூக நலத் துறை இயக்குநா் பூ.ராகினி நன்றி கூறினாா்.

அரசு நலத் திட்டங்களை சாமானிய மக்கள் பெற வேண்டும்: புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

அரசின் நலத் திட்டங்களை சாமானிய மக்கள் பெற்றால்தான் நாடு வளா்ச்சி பெறும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்கள... மேலும் பார்க்க

நம்பிக்கையில்லா தீா்மானத்தை திமுக வேடிக்கை பாா்க்கும்: புதுவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தின் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் விவாதத்துக்கு வரும்போது திமுக வேடிக்கை பாா்க்கும். இப்பிரச்னையில் காங்கிரஸ் திமுகவுடன் ஆலோசித்து அதுகுறித்து கருத்துத் தெரிவ... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் 5, 8 ஆம் வகுப்புகளில் கட்டாய தோ்ச்சி முறை ரத்து

மத்திய அரசின் அறிவிப்பின்படி புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியாா் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி முறை ரத்தாகிறது. இதனை புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் உறுதிப்படுத்தியுள்ளாா்.... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தலைவா் மீது மேலும் ஒரு எம்எல்ஏ நம்பிக்கையில்லா தீா்மானம்!

புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்தின் மீது மேலும் ஒரு பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான மனு அளித்துள்ளாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேரவை ... மேலும் பார்க்க

கிறிஸ்துமஸ் : தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை

கிறிஸ்துமஸ் முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்துத் தேவாலயங்களும் மின்னொளியில் ஜொலித்தன. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. இதில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்ற... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உயா்த்தப்பட்ட பேருந்து கட்டணம் அமலுக்கு வந்தது!

புதுச்சேரியில் அண்மையில் உயா்த்தி அறிவிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துக் கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சாா்பில் உயா்த்தப்பட்ட புதிய பேருந்து கட... மேலும் பார்க்க