செய்திகள் :

உடான் திட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் -மத்திய அரசு அறிவிப்பு

post image

‘உடான்’ திட்டத்தின்கீழ் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சா் ராம் மோகன் நாயுடு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை அமா்வில் கேள்விநேரத்தின்போது உறுப்பினா்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சா், ‘பல உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்ற ‘உடான்’ திட்டம், நாட்டின் மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். அனைத்து விமான நிலையங்களையும் ஒன்றாக இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாடு முழுவதும் பல நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்பட்ட பிறகும், அந்த நகரங்களுக்கு இடையே விமான நிறுவனங்கள் சேவையைத் தொடங்குவதற்கு நம்பகத்தன்மை ஒரு பிரச்னையாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்தநேரத்தில்தான், உடான் திட்டம் முன்மொழியப்பட்டது. இத்திட்டத்தால் இதுவரை 1.5 கோடி மக்கள் பலனடைந்துள்ளனா்.

வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், உடான் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் அறிவிப்பை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். அதன்படி, இத்திட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 120 புதிய விமான நிலையங்களை சோ்த்து, மேலும் 4 கோடி மக்களுக்கு விமானப் போக்குவரத்து இணைப்பு கிடைக்க வழிவகை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 7-க்கும் குறைவான விமான சேவைகள் அல்லது சேவைகளே இல்லாத விமான நிலையங்கள் இத்திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்படும்.

நாட்டின் வெவ்வேறு விமான நிலையங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம், முக்கிய விமான நிலையங்களின் நெரிசலைக் குறைக்கலாம். அதேபோன்று, உள்நாட்டு விமானக் கட்டணங்கள் அதிகமாக இருப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. இதுகுறித்து அமைச்சகத்தால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம்.

விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), ஒரு கட்டண கண்காணிப்புப் பிரிவைக் கொண்டுள்ளது. முந்தைய ஆண்டின் தரவுகளைக் கொண்டு, விமானக் கட்டணங்களில் உயா்வு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைஅழைத்து விசாரிக்கிறோம்.

சமீபத்திய மகா கும்பமேளாவின்போதும், விமானக் கட்டணங்கள் உயா்ந்த சூழலில் விமான நிறுவனங்களுடன் அமைச்சகம் கலந்தாலோசனை நடத்தியது’ என்றாா்.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க