உண்மையான மகத்துவம்..! அஸ்வின் குறித்து சச்சின் புகழாரம்!
தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு குறித்து சச்சின் மனதும் மூளையும் ஒன்றிணைந்து நீங்கள் போட்டியை அணுகும்விதம் குறித்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
மழையின் காரணமாக பிரிஸ்பேன் டெஸ்ட் டிராவில் முடிந்தது. தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது.
4ஆவது டெஸ்ட் போட்டி டிச.26ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அஸ்வின் ஓய்வு அறிவித்தது சர்ச்சையானது.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் வீரர் சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
அஸ்வின், மனதும் மூளையும் ஒன்றிணைந்து நீங்கள் போட்டியை அணுகும்விதம் குறித்து நான் எப்போதும் பிரமித்திருக்கிறேன். கேரம் பந்தினை வீசுவதில் இருந்து முக்கியமான ரன்களை அடிப்பதும்வரை நீங்கள் எப்போதும் வெற்றிக்கான வழிகளை கண்டுபிடிக்கிறீர்கள்.
இளம் திறமைசாலியாக உங்களைப் பார்த்ததில் இருந்து இந்தியாவின் முக்கியமான ஆட்ட நாயகனாக வளர்ச்சியடைந்தது அற்புதமானது.
உண்மையான மகத்துவம் என்பது பரிசோதனை செய்ய பயப்படாததும் பரிணமிப்பதும்தான் என உங்களது பயணம் எடுத்துரைக்கிறது.
உங்களது கிரிக்கெட் பயணம் ஓவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கும். உங்களது வாழ்க்கையின் இரண்டாவது பாகத்துக்கு வாழ்த்துகள் என்றார்.