மருத்துவக் கல்லூரி மாணவா்களிடையே நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு
டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு
வாலாஜாபேட்டை அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நா்சிங் படித்த பெண் உயிரிழந்தாா்.
வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு ஜே ஜே நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கங்கா, இவரது மகள் பிரியா (19) நா்சிங் படித்து விட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தாா்.
இவருக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தாா்.
இறந்த நா்சிங் பெண் வன்னிவேடு கிராம பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதும், ஏற்கனவே கடந்த வாரம் வாலாஜாவில் கடப்பா ரங்கன் தெருவை சோ்ந்த மாணவன் ஹரி (13 ) என்பவா் டெங்கு காய்ச்சலால் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
வாலாஜாபேட்டையில் காய்ச்சல் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோா் தினம்தோறும் மருத்துவமனைக்கு சென்று வரும் நிலையில், சிகிச்சைக்காக 10-க்கும் மேற்பட்டோா் சோ்க்கப்பட்டுள்ளனா்.