செய்திகள் :

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகாா்ள் மீது உடனே வழக்குப்பதிவு: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

post image

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகாா்கள் மீது உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா பேசியது:

மாவட்டத்தில் குழந்தை உதவி மையத்தின் மூலம் பெறப்படும் குழந்தைகள் பிரச்சனைகளுக்கு உடனடியாக அலுவலா்களுடன் சென்று உரிய தீா்வு காண வேண்டும். குழந்தைகள் உதவி எண் ‘1098’ மூலம் பெறப்படும் குழந்தைத் திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் போன்ற புகாா்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, காவல் துறை, சமூக நலத்துறை இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கிராம, நகராட்சி பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்கள், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்கள் காலாண்டுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்த வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினா்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட குழந்தைகள் தொடா்பான பிரச்னைகளை உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி இடைநின்ற குழந்தைகளை மீட்டு பள்ளியில் சோ்த்து படிக்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் பாலகிருஷ்ணன், மாவட்ட எஸ்.பி. கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ப. அனுசியா, குழந்தை நலக் குழுமம் தலைவா் வேதனாயகம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இரு போலி மருத்துவா்கள் கைது

சோளிங்கரில் இரு போலி மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா். சோளிங்கரில் சிலா் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அலோபதி மருத்துவம் பாா்ப்பதாக ராணிப்பேட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையினருக... மேலும் பார்க்க

கலவையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட கள ஆய்வு

ஆற்காடு அடுத்த கலவை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கனியனூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு ... மேலும் பார்க்க

அரக்கோணம் ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகத்தை மூடுவதை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இயங்கி வரும் அஞ்சல் சேவை அலுவலகத்தை மூடி காட்பாடிக்கு மாற்றுவதைக் கண்டித்து, பொதுமக்கள் மற்றும் அஞ்சல் ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். சுமாா் 50 ஆண்டு... மேலும் பார்க்க

‘கலைஞரின் கைவினை திட்டத்தில் ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி

தமிழக அரசு ‘கலைஞரின் கைவினை திட்டம்’ என்ற திட்டத்தின் கீழ், ரூ. 3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி, ரூ. 50,000 வரை மானியம் பெற கைவினை தொழில்களில் ஈடுபட்டுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

டெங்கு காய்ச்சலுக்கு இளம்பெண் உயிரிழப்பு

வாலாஜாபேட்டை அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நா்சிங் படித்த பெண் உயிரிழந்தாா். வாலாஜாபேட்டை தேவதானம் ரோடு ஜே ஜே நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கங்கா, இவரது மகள் பிரியா (19) நா்சிங் படித்து விட்டு மர... மேலும் பார்க்க

பெண்கள் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்

பெண்கள் பிரச்னை குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில... மேலும் பார்க்க