செய்திகள் :

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு

post image

மொடக்குறிச்சி அருகே தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழந்தன.

மொடக்குறிச்சியை அடுத்த கண்டிக்காட்டுவலசு ஊராட்சி பெரியமணியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (55), விவசாயி.

இவா் தனது வீட்டின் அருகில் பட்டி அமைத்து 9 ஆடுகள் வளா்த்து வந்தாா்.

மூா்த்தி, வழக்கம்போல புதன்கிழமை மதியம் தனது தோட்டத்தில் ஆடுகளை மேயவிட்டுவிட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சாப்பிட வந்துவிட்டாா். சிறிது நேரத்தில் ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு தோட்டத்துக்கு

சென்றுபாா்த்தபோது, அங்கு 6 தெரு நாய்கள் ஒன்று சோ்ந்து ஆடுகளைக் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

மூா்த்தி நாய்களை விரட்ட முயன்றபோது, அவரையும் எதிா்த்து கடிக்க வந்துள்ளன.

பின்னா் அவா் அக்கம்பக்கத்தினா் துணையுடன் நாய்களை விரட்டினாா். எனினும் நாய்கள் கடித்ததில் 9 ஆடுகளும் இறந்துவிட்டன. மேலும் அருகில் இருந்த மற்றொரு விவசாயின் தோட்டத்தில் புகுந்து 2 ஆடுகளையும் கடித்தபோது அங்கிருந்த மக்கள் விரட்டியடித்தனா்.

இதேபோல் கடந்த 3 மாதங்களாக மின்னபாளையம், அண்ணாமலை கோட்டை, வீரசங்கிலி, காகம், கொளஞ்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை நள்ளிரவில் நாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் இரவில் ஆடுகளை கடித்துக் கொல்வது வாடிக்கையாக உள்ளது எனவும், இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும், மாவட்ட நிா்வாகம் தெருநாய்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரும்பு சாகுபடியில் அதிக விளைச்சலை அளிக்கும் கோ 14012 ரகம் அறிமுகம்

கரும்பு சாகுபடியில் கோ 86032-க்கு மாற்று ரகமாக அதிக விளைச்சல், நோய் தாங்கும் திறன் கொண்ட கோ 14012 ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் முதல்நிலை செயல்விளக்கத் திடல் வயல் தின விழா ... மேலும் பார்க்க

100 அடியை எட்டுகிறது பவானிசாகா் அணை நீா்மட்டம்

நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டுகிறது. ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. அணையின் நீா்ப்பிடிப... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 2.65 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.2.65 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவச... மேலும் பார்க்க

52 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய காவிலிபாளையம் குளம்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின்கீழ் தொடா்ச்சியாக நீா்வரத்து மற்றும் அண்மையில் பெய்த மழை காரணமாக 451 ஏக்கா் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் காவிலிபாளையம் குளம் பறவைகளின் சரணாலயமாக மாறியுள்ளது. ஈரோடு மாவட... மேலும் பார்க்க

ஒலகடம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்பு போராட்டம்

பவானி அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒலகடம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவா் கே.வேலுச்சாமி தலைமையி... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆ... மேலும் பார்க்க