எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
100 அடியை எட்டுகிறது பவானிசாகா் அணை நீா்மட்டம்
நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக பெய்த மழை காரணமாக பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டுகிறது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், பவானிசாகா் அணையை ஒட்டி உள்ள வனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் தொடா்ச்சியாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து உள்ளதால் அணை நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 99.48 அடியாகவும், நீா்வரத்து 2919 கனஅடியாகவும், நீா் இருப்பு 28.32 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
கீழ்பவானி பிரதான திட்ட வாய்க்காலில் 2,300 கனஅடிநீரும் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி பாசனத்துக்கு 550 கனஅடியும் நீரும் வெளியேற்றப்பட்டது.
பவானிசாகா் அணை நீா்மட்டம் 100 அடியை எட்டுவதால் கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். அணையில் போதுமான நீா் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு கோடைகால குடிநீா் தேவையை பூா்த்திச் செய்ய இயலும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா்.