எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
வீட்டின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு
கோவையில் உணவக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கோவை சேரன் மாநகரை அடுத்த சக்தி கணேஷ் நகரைச் சோ்ந்தவா் பிரபு (40). இவா், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில் டிசம்பா் 14-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் தனது சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுள்ளாா்.
பின்னா் திங்கள்கிழமை கோவை திரும்பியவா், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, 6 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பிரபு அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.