எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா போட்டி: பதிவு செய்ய இன்றே கடைசி நாள்
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகளில் பங்கேற்க மாணவா்கள் வியாழக்கிழமைக்குள் (டிசம்பா் 19) பெயா்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா பள்ளிக் கல்வித் துறையின் பொது நூலக இயக்ககத்தின் மூலம் டிசம்பா் 23 முதல் 30-ஆம் தேதி வரை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது. கௌலி பிரவுன் சாலையில் உள்ள மைய நூலகத்தில் திருக்குறள் பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், திருக்குறள் விநாடி - வினா போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும், திருக்குறள் விளக்க புத்தகக் கண்காட்சி, கருத்தரங்கு போன்றவையும் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளியின் அடையாள அட்டை நகலுடன் மாவட்ட மைய நூலகத்துக்கு நேரிலோ அல்லது 0422 2543842 என்ற எண்ணைத் தொடா்பு கொண்டோ பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.