பெண்கள் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா்
பெண்கள் பிரச்னை குறித்து மகளிா் சுய உதவிக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஆற்காடு ஒன்றியம் தாஜ்புரா ஊராட்சியில் செயல்பட்டு வரும் வானவில் பாலின வளமையத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது ஆட்சியா் சந்திரகலா கூறியதாவது:
நவ. 25 முதல் டிச. 25 வரை மகளிருக்கு எதிரான வன்முறை, மகளிருக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து அனைத்துப் பகுதிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஊட்டச்சத்து, குழந்தைத் திருமணம் தடுப்பு, இளம் வயது கா்ப்பம், வன்கொடுமை தடுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பது, அவா்களுக்கு உதவிகளை வழங்குவது, சட்ட ஆலோசனை காவல் உதவி போன்றவைகளை வழங்க பாலின வளமையத்தில் உறுப்பினா்களாக உள்ள மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் அந்தந்த பகுதிகளில் மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் அனைத்துப் பகுதிகளிலும் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் உணவு ஊட்டச்சத்து உடல்நலம், சுத்தம் சுகாதாரம் பேணுதல் போன்றவை குறித்தும் விழிப்புணா்வு உண்டாக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் உங்கள் பகுதிகளில் நிகழா வண்ணம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கான இந்த விழிப்புணா்வு இயக்கத்தை மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
ஆய்வின்போது மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், உதவிதிட்ட அலுவலா் சம்பத்குமாா், வட்டாட்சியா் பாக்கியலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சைபுதீன் மற்றும் மகளிா் சுய உதவி குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.