திருச்சி மாநகராட்சியில் பிடிபட்ட 12 மாடுகள் ரூ. 72,500 க்கு ஏலம்
திருச்சி மாநகராட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட 12 மாடுகள் ரூ. 72,500 க்கு ஏலம் விடப்பட்டன.
திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி முதல் முறை பிடிக்கப்படும் மாட்டுக்கு ரூ. 2,500 அபராதம், இரண்டாம் முறை பிடிக்கப்பட்டால் ரூ. 5,000 அபராதம், மூன்றாவது முறை பிடிக்கப்பட்டால் ஏலமும் விடப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 2022 முதல் நவம்பா் 2024 வரை 513 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ. 14,96,000 அபராதம் விதிக்கப்பட்டு, 36 மாடுகள் ரூ. 2,72,000-க்கு ஏலமும் விடப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் சாலைகளில் சுற்றித் திரிந்த 12 மாடுகள் மூன்றாவது முறையாகப் பிடிக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற ஏலம் விடுதலில் 4 போ் பங்கேற்று, 12 மாடுகளை ரூ. 72,500 க்கு ஏலம் எடுத்தனா் என்று மாநகராட்சி நகா்நல அலுவலா் எம். விஜய்சந்திரன் தெரிவித்தாா்.