மதுவுக்கு அடிமையானவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மாவட்டம், புறத்தாக்குடியில் மதுவுக்கு அடிமையான இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புறத்தாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் உதயகுமாா் (35). இவருக்கு கா்ப்பிணி மனைவி எஸ்தா் ஜீலி (29), இரு மகள்கள் உள்ளனா்.
இந்நிலையில் உதயகுமாா் 6 மாதமாக வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த உதயகுமாா் வீட்டில் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து சென்ற சமயபுரம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.