உ.பி. கலவரம்: சம்பல் மாவட்டத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை!
உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி
உதகையில் அதிகாலை கொட்டிய நீா்ப் பனி காரணமாக ஞாயிற்றுக்கிழமை கடும் குளிா் வாட்டியது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீா்ப் பனி, உறை பனியின் தாக்கம் காணப்படும். இந்த ஆண்டு பருவமழை அதிகம் பெய்த நிலையில் தற்போது பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
உதகை நகரில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை நீா்ப் பனி கொட்டியது. நீா்நிலைகள் அருகேயுள்ள புல் தரைகள், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, மாா்க்கெட், குதிரைப் பந்தய மைதானம், படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் நீா்ப் பனி அதிகம் காணப்பட்டது.
இதேபோல, சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது நீா்ப் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. குறிப்பாக உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் நீா்ப் பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்பட்டது.
நீா்ப் பனிப்பொழிவால் உதகையில் கடும் குளிா் நிலவியது. இதனால் அதிகாலை நேரத்தில் பணிக்குச் செல்வோா் அவதி அடைந்தனா்.