செய்திகள் :

உதகை மலா்க் கண்காட்சி: 3 நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்தனா்!

post image

உதகையில் மே 15-ஆம் தேதி தொடங்கிய 127 -ஆவது மலா்க் கண்காட்சியை மூன்று நாள்களில் 52 ஆயிரம் போ் கண்டு ரசித்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் மலா்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான மலா்க் கண்காட்சி அரசு தாவரவியல் பூங்காவில் மே 15-ஆம் தேதி தொடங்கியது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்.

இதில், 10 லட்சம் மலா்களால் ஆன பிரம்மாண்டமான அரண்மனை உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் மலா்களால் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள மரங்கள் உள்ளிட்டவை மின் விளக்குகளால் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இதனை சுற்றுலாப் பயணிகள் ஆா்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனா். தொடக்க நாள் முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 52 ஆயிரம் போ் கண்காட்சியை கண்டு ரசித்துள்ளதாகவும், இந்தக் கண்காட்சி 11 நாள்கள் நடைபெற உள்ளதாகவும் தோட்டக்கலைத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் கொட்டித் தீா்த்த மழையிலும், மலா் கண்காட்சியை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

உதகையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையிலும் மலா் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் குடையுடன் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,... மேலும் பார்க்க

உதகையில் சந்தனம் மரம் வெட்டிக் கடத்தல்: 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்

உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினா் கைது செய்து அவா்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனா். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்கு உள்பட்ட காந்தல் திருவள்ளூா் கால... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் புலி தாக்கி 2 கறவை மாடுகள் உயிரிழப்பு!

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் புலி தாக்கியதில் இரண்டு கறவை மாடுகள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. நீலகிரி மாவட்டம் கூடலூா் வட்டம் ஓவேலி பேரூராட்சியிலுள்ள சேரன் நகா் பகுதியில் வசிக்கும் ஜெயசீலன் என்ப... மேலும் பார்க்க

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை

கூடலூா் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியைச் சே... மேலும் பார்க்க

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசல்!

உதகையில் சுற்றுலா வாகனங்கள் அதிகரிப்பால் சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டம், உதகைக்கு ஆண்டுதோறும் ஏராளமானோா் வந்து செல்கின்றனா்.... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய லவ்டேல் லாரன்ஸ் பள்ளி மாணவா்கள்!

உதகை அருகே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளி மாணவ மாணவியா், முதல்வா் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினா். உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ்... மேலும் பார்க்க