பரங்கிப்பேட்டையில் போலீஸ் பாதுகாப்புடன் 150-க்கும் அதிகமான விநாயகா் சிலைகள் கரை...
உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள்: 8 பேர் பலி
உத்தரகண்டில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல்வேறு இடங்களில் மீண்டும் மேக வெடிப்புகள் ஏற்பட்டன.
இந்த சம்பவங்களில் 8 பேர் பலியாகினர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இடிபாடுகளுக்கு அடியில் சுமார் 35 கால்நடைகள் புதைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல வீடுகள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாகவும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுக்கள் விரைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, பஞ்சாபில் கடும் வெள்ளம்! தீவிர மீட்புப் பணிகளில் விமானப் படை!
சுற்றுலாப் பயணிகளும் ஆங்காங்கே சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அலக்நந்தா நதியின் நீர்மட்டம் உயர்ந்ததைத் தொடர்ந்து ருத்ரபிரயாக் நகரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாள்களில் உத்தரகண்டின் சில பகுதிகளில் மேக வெடிப்புகள் ஏற்பட்டன. சமீபத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலியில் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஏழு பேர் பலியாகினர்.