சாலை விபத்துகளை தடுக்க தீவிர நடவடிக்கை அவசியம்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!
உத்தரகண்ட் பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 4 பேர் பலியானதாக இந்திய - திபெத் எல்லை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
பனிச் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் அயராது வேலை செய்வதாக இந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மணீஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
”மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது. அப்பகுதியில் பனிப்பொழிவு நிலவுவதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று மேலும் அவர் தெரிவித்தார்.
பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பனிச்சரிவில் சிக்கிய 55 பேர்
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
மனா மற்றும் பத்ரிநாத் இடையே வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் இருந்த 55 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா்.
இதையும் படிக்க: டிரம்ப் - ஸெலென்ஸ்கி இடையே காரசார வாக்குவாதம்! நடந்தது என்ன?
இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.
பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது.
உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டு மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.