செய்திகள் :

உத்தரப்பிரதேசத்தில் லட்டு திருவிழா: மேடை சரிந்து 6 பேர் பலி, 50 பேர் காயம்..

post image

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் என்ற இடத்தில் மத நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜெயின் மதத்தினர் அங்குள்ள ஜெயின் கோயிலில் இதற்காக ஒரே இடத்தில் கூடினர். அவர்கள் ஒன்று கூடி லட்டு மஹோத்சவ் நிகழ்ச்சியை நடத்தினர். கடந்த 30 ஆண்டுகளாக இந்த லட்டு மஹோத்சவ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாதுக்கள் முன்பு ஆதிநாத்திற்கு லட்டு வழங்குவது வழக்கம். இதற்காக அங்கு கம்புகள் மூலம் பிரம்மாண்ட மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஏறி நின்றதால் எடை தாங்காமல் மேடை சரிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறியபடி முண்டியடித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் உடனே மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லேசாக காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து நிகழ்ச்சிக்கு வந்திருந்த ராகேஷ் ஜெயின் என்ற பக்தர் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் லட்டு மஹோத்சவத்தின் போது மேடை அமைப்பது வழக்கம். மேடையில் பண்டிதர்கள் ஏறி நின்று லட்டு பிரசாதத்தை கொடுப்பார்கள். இந்த ஆண்டு அப்படி கொடுத்தபோது மேடை சரிந்துவிட்டது''என்றார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க உதவும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

கோயில் விழாவில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட யானைகள்; அலறிய பக்தர்கள் - 3 பேர் பலி... 32 பேர் காயம்!

கேரள மாநிலத்தில் கோயில் விழாக்களில் யானைகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சுவாமி எழுந்தருளல், ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டம், கோயிலாண்டி மணக்க... மேலும் பார்க்க

மதுரை மாட்டுத்தாவணியில் தோரண வாயில் இடிப்பு - விபத்தில் ஜேசிபி டிரைவர் மரணம்; ஒப்பந்ததாரர் படுகாயம்

மதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் உலத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டபோதும், அதற்கு பின்பு நடந்த அரசு நிகழ்ச்சிகளின்போதும் முக்கிய இடங்களில் தமிழுக்கு பெருமை சேர்த்தவர்களின் பெயரில் தோரண வளைவுகள் அமைக்கப்பட்டது... மேலும் பார்க்க

விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

விருதுநகரை அடுத்த வச்சக்காரப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட சின்னவாடி கிராமத்தில், சதானந்தபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 55) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை, 'சத்யபிரபு ஃபயர் ஒர்க்ஸ் ஃபேக்டரி' எனும... மேலும் பார்க்க

விருதுநகர்: என்.ஹெச்சில் அடுத்தடுத்து விபத்து: வேடிக்கை பார்த்தவர் உட்பட 3 பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). அப்பகுதியில் உள்ள பட்டாசு கம்பேனி ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், உறவினரிடம் பணம் வாங்... மேலும் பார்க்க

கேரளாவை உலுக்கிய சாலை விபத்து - ஓராண்டுக்கு பிறகு கோவையில் சிக்கிய குற்றவாளி

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில்கடந்தாண்டு பிப்ரவரி மாதம், பேபி என்ற மூதாட்டியும் அவரின் 9 வயது பேத்தி த்ரிஷ்னாவும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அந்த வழியே அதிவே... மேலும் பார்க்க

மும்பை: பன்றி என நினைத்துச் சுட்டதில் இருவர் பலி; மறைக்க முயன்ற மக்கள்; வசமாகச் சிக்கிய குற்றவாளிகள்

மும்பையின் மையப்பகுதியில் வனப்பகுதி இருக்கிறது. அதில் சிறுத்தைகள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மும்பையையொட்டி இருக்கும் பால்கர் மாவட்டத்திலும் அதிக அளவில் வனப்பகுதி இருக்கிறது. இந்த வ... மேலும் பார்க்க