'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' குடியிருப்புப் பகுதியில் உலவும் ஒற்றை யானை: மக்கள...
உத்தரப் பிரதேச இடைத் தோ்தல் வன்முறை: 100 போ் மீது வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் மீராபூா் சட்டப் பேரவை இடைத்தோ்தலின்போது கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட சமாஜவாதி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தொண்டா்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கக்ரோலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கலைக்க முற்பட்டபோது போலீஸாா் மீது கல்வீசத் தொடங்கினா்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா பன்சால் கூறுகையில், ‘வன்முறையில் ஈடுபட்டதாக சமாஜவாதி தொண்டா்கள் 15 போ் மீதும், மஜ்லீஸ் கட்சித் தொண்டா்கள் 10 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது கொலை முயற்சி, காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
உரிய ஆவணங்களுடன் வாக்களிக்க வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவா் மௌலானா இம்ரான் காஸ்மி குற்றம் சாட்டியுள்ளாா். போராடியவா்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாா் மீது கல் வீசியதாக கூறுவது உண்மையல்ல எனவும் அவா் கூறினாா்.
புதன்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது.