செய்திகள் :

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்சாலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நாகேஷ்வர் தந்தை கேசவ் ராஜ் கொடுத்த புகாரில், "எனது மகன் பைக்கில் புறப்பட்டுச் சென்றான். ஆனால் அதன் பிறகு அவன் வீடு திரும்பவில்லை. மறுநாள் இறந்துவிட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

எனது மறுமகள் நேகாவிற்கு ஜிதேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்தது. அவர்கள் இரண்டு பேரும்தான் நாகேஷ்வரைக் கொலை செய்து சாலையோரம் தூக்கிப்போட்டுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நேகாவை அழைத்துச்சென்று விசாரித்தபோது தனது கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ''நாகேஷ்வர் சில காலம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் சிறையில் இருந்தார். அந்நேரம் நேகாவிற்கு ஜிதேந்திராவுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சிறையிலிருந்து வெளியில் வந்த பிறகு அவர்களின் தொடர்பைத் தெரிந்து கொண்ட நாகேஷ்வர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் நேகா தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நேகா தனது கணவனை விட்டுச் சென்றார். அவர்களைச் சேர்த்து வைக்க போலீஸாரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் முடியாமல் போய்விட்டது.

எனவே நாகேஷ்வரை நேகா அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு அவரை அளவுக்கு அதிகமாக மது குடிக்கச் செய்துள்ளார். அவர் சுயநினைவை இழந்தவுடன் ஜிதேந்திராவும், நேகாவும் சேர்ந்து கழுத்தை நெரித்தும், ஆயுதத்தால் தாக்கியும் கொலை செய்தனர்.

பின்னர் உடலை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர். வாகனத்தில் முன்பகுதியில் அவர்களின் குழந்தை இருந்தது. பின்னால் நேகா தனது கணவனின் உடலை மத்தியில் வைத்துப் பிடித்துக்கொண்டார். ஜிதேந்திரா பைக்கை ஓட்டினார். அவர்கள் சம்பவ இடத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் எடுத்துச்சென்று சாலையில் உடலைப் போட்டுள்ளனர்.

விபத்தில் இறந்துவிட்டது போன்று ஜோடிக்க இது போன்று செய்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் மும்பைக்குச் சென்று வாழ்க்கை நடத்தலாம் என்று திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இருவரும் கைது செய்யப்பட்டுவிட்டனர்'' என்று தெரிவித்தனர்.

Murder
Death

நேகா போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ''தனது கணவர் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். அவருடன் சேர்ந்து வாழமுடியாது என்று சொன்ன பிறகும் என்னை விடாமல் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். அடிக்கடி புதுப்புது நம்பர்களிலிருந்து போன் செய்து சித்ரவதை கொடுத்தார். விவாகரத்து நிலுவையிலிருந்தபோதும், விடாமல் இது போன்று செய்து கொண்டிருந்தார்.

அதோடு ஜிதேந்திராவுடனும் அடிக்கடி சண்டையிட்டார். இதனால் வெறுத்துப்போய் அவரைக் கொலை செய்ய முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில... மேலும் பார்க்க

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெத்தாம்பாளையம... மேலும் பார்க்க

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க