செய்திகள் :

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!

post image

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் காலை, மாலையில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதி சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு நடைபெறும்.

26-ஆம் தேதி தேரோட்டமும், 27-ஆம் தேதி விநாயகப் பெருமாள் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதையடுத்து, பூக்குழி இறங்கி பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

தமிழகத்தில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவா் குடும்பங்களுக்கு எம்எல்ஏ நிதியுதவி அளிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 43 மீனவா்களின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.2.15 லட்சம் நிதியுதவியை சனிக்கிழமை... மேலும் பார்க்க

சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவா் கைது!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் சரக்கு ஆட்டோவில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொண்டி பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத... மேலும் பார்க்க

நகை திருடிய பெண் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் ... மேலும் பார்க்க

சிறிய விசைப் படகு மீனவா்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள், படகுகளை விடுவிக்க கோரி, ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை சிறிய படகு மீனவா்கள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செ... மேலும் பார்க்க

கோயில் கொடை விழா: அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சுயம்புலிங்க துா்கை அம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு, பால் குடம், அக்னிச் சட்டி எடுத்து பக்தா்கள் சனிக்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா். அபிராமம் சாந்த கணபதி கோய... மேலும் பார்க்க

கரியமல்லம்மாள் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கரியமல்லம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் ... மேலும் பார்க்க