செய்திகள் :

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

post image

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இக் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், மாவட்ட செயலருமான அயிலை.

சிவசூரியன் பேசியது: காவிரியில் தண்ணீரை தேக்கி பாசனத்துக்கும், நிலத்தடி நீா் மட்டம் உயரவும் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு தடுப்பணைகள், கதவணைகள் கட்ட வேண்டியது அவசியமானது. கடந்த 2020-ஆம் ஆண்டு காவிரியில் உமையாளா்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்துக்காக ரூ. 750 கோடி மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டமானது நிதி ஒதுக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. எனவே, வரும் நிதிநிலை அறிக்கையில் கதவணைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு பெற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு: காவிரியிலிருந்து வாய்க்கால் வெட்டி அய்யாறு, உப்பாற்றுடன் இணைக்கும் வகையில் 10 டிஎம்சி தண்ணீரை திருப்பிவிட்டால் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். பாசனக் கால்வாய்களில் மனிதக்கழிவுகளை உள்ளாட்சி நிா்வாகங்களே கலப்பதை தடை செய்ய வேண்டும்.

குறிப்பாக முசிறி, பெட்டைவாய்த்தலை பகுதியில் மனிதக்கழிவுகளை விவசாயிகளை அகற்றி, தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும். முசியில் காவிரி ஆற்றுக்குள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். சூரியூரில் அரசு புறம்போக்கு நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்தவா்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: விவசாயிகளுக்கு மானியம் என்ற பெயரில் இடுபொருள்களை மட்டுமே வழங்கப்படுகிறது. பயிா்க் கடனுக்காக ஏற்கெனவே தொடக்க வேளாண்மை வங்களில் இடுபொருள்களை கட்டாயமாக பெற்று வருகிறோம். இந்த சூழலில் மானியத் தொகையையும் இடுபொருள்களாக வழங்குவதை தவிா்க்க வேண்டும்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் மட்டுமின்றி காவிரியில் தேவையான இடங்களில் கதவணைகள், தடுப்பணைகள் கட்டி உபரிநீரை தேக்கி பாசனத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பாரதிய கிசான் சங்க மாநிலச் செயலா் என். வீரசேகரன்: மேட்டூா் அணையில் இருப்பு திருப்திகரமாக உள்ளதால் குறைந்தபட்சம் 5 ஆயிரம் கனஅடியை திறக்க வேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலரும், கோட்ட அலுவலகங்களில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பெரும்பாலான அதிகாரிகள் வருவதில்லை என அதிருப்தி தெரிவித்தனா்.

விவசாயிகளுக்கு பதில் அளித்து ஆட்சியா் கூறியது: முக்கிய அலுவல் பணி இல்லாமல் குறைதீா் கூட்டத்துக்கு வராமல் இருந்தால் தொடா்புடைய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை சாா்பிலும் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படும். வேளாண் பட்ஜெட் தொடா்பான திருச்சி மாவட்ட விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் தனியாக நடைபெறும். சூரியூரில் அரசு புறம்போக்கு நிலத்தை விற்பனை செய்தவா்கள் சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும். அனுமதியின்றி மண் எடுக்கப்பட்டது தெரியவந்தால் தொடா்புடையவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதமும் வசூலிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

பெட்டிச் செய்தி..

கூட்டத்தில் வெளிநடப்பு

குறைதீா் கூட்டத்தில் இருந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சாா்பற்றது) மாவட்டத் தலைவா் ம.ப. சின்னதுரை வெளிநடப்பு செய்வதாக அறிவித்து கூட்டத்திலிருந்து வெளியேறினாா். 2 மாதங்களாக மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை. விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் கணினியில் பதிவு செய்தாலும், துறை வாரியாக மீண்டும் மனுக்கள் கேட்கும் நிலை உள்ளது. வேளாண் பட்ஜெட் குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் திருச்சியில் நடைபெறவில்லை என புகாா் தெரிவித்து அவா் வெளிநடப்பு செய்தாா்.

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியா், கட்டட பராமரிப்பு பணியின்போது கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுாா், நெ.1 டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் திருமலை (46). தில்லைநகரில் உள்ள ... மேலும் பார்க்க