கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
உயர்கல்வி பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று துணைவேந்தர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளா்களின் ஆலோசனைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் இன்று(ஏப். 16) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
”உயற்கல்வி மாணவர் சேர்க்கை 30% அதிகரித்துள்ளது. உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மாணவர்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை தர வேண்டும். மாணவர்களுக்கு தடையற்ற, தரமான கல்வியை பல்கலைக்கழகங்கள் தர வேண்டும்.
வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு மாணவர்களை உருவாக்க வேண்டும். ஏஐ உள்ளிட்டவற்றை சேர்த்து புதிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்.
தரமான கல்வியால் நாட்டை நாம் வழிநடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கான தொடக்கம்தான் இந்த கூட்டம். நாட்டின் சிறந்த கல்வி ஆலோசர்களுடன் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளோம்.
நான் முதல்வர் திட்டம் மூலம் 27 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை மாறியுள்ளது. உலகளாவிய வேலைவாய்ப்புகளில் நம் மாணவர்கள் போட்டி போடும் சூழல் ஏற்பட்டுள்ளது.” என்றார்.
இதையும் படிக்க: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர். கவாய்!