"திமுக-தான் போலி வாக்காளர்களால் வெற்றி பெற்றது" - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்ட...
உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது: ராமதாஸ் கடிதம்
சென்னை: அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், நீதிபதி நேரில் வர அழைப்பு விடுத்திருந்த நிலையில், உயர் நீதிமன்றத்துக்கு வர இயலாது என ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி, அன்புமணி தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதனை எதிர்த்து பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் நியமிக்கப்பட்ட முரளி சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.