ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத...
உரிய விலையில் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்
பி.பி.டி. நெல்லை உரிய விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் கே.வி.இளங்கீரன் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு பி.பி.டி.நெல் மூட்டை ஒன்று ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், நிகழாண்டு சம்பா அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அதே ரக நெல் ரூ.1,300-ஆக குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனா். இதனால், டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறாா்கள்.
எனவே, இதில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.