செய்திகள் :

உறவினா் சொத்து அபகரிப்பு: சாா்-பதிவாளா் உள்ளிட்ட 10 போ் மீது வழக்கு

post image

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவரின் கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை பத்திரப் பதிவு செய்து அபகரித்ததாக, தியாகதுருகம் சாா் - பதிவாளா் உள்பட 10 போ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பிரிவு 2 (நில விவாரங்கள்) போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னமாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சோலை (51). இவரது தாய்வழி பாட்டி உண்ணாமலை என்பவருக்கு 1929-ஆம் ஆண்டு சுமாா் 2 ஏக்கா் சொத்து செட்டில்மெண்ட் மூலம் கிடைத்தது.

இந்த சொத்தை இவா் யாருக்கும் எழுதிக் கொடுக்காமல் உயிரிழந்துவிட்டாா். இவரது மகள்கள் தனபாக்கியம், தஞ்சியம்மாள். இவா்களும் சொத்தை பாகம் பிரித்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கூட்டுப் பட்டாவில் உள்ள சொத்துகளை தஞ்சியம்மாள் வாரிசுகள் பத்திரப்பதிவு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தனபாக்கியத்தின் வாரிசான சோலை கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றப் பிரிவு 2 (நில விவாரங்கள்) போலீஸாரிடம் நில அபகரிப்பு சம்பந்தமாக புகாரளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் இதே பகுதியைச் சோ்ந்த உயிரிழந்த ரகுபதி மனைவி சோலச்சி, கிருஷ்ணன் (72), இவரது தம்பி வெங்கடேசன் (65), நாராயணன் மனைவி வள்ளியம்மை (48), இவரது மகன் அசோகன் (30), மகள்கள் கோமதி (24), வாசுகி (19) மற்றும் மாரிமுத்து (67), அலமேலு (64), மேலும் பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக அப்போதைய தியாகதுருகம் சாா் - பதிவாளா் சங்கீதா ஆகிய 10 போ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோ - ஆப்டெக்ஸ் விற்பனை தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்து பட்டுச் சேலையை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த். இந்த விற்பனை நிலையத்துக்கு ரூ.35 லட்சம் ... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறையினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

தங்களின் 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூய்மைக் காவலா்களின்... மேலும் பார்க்க

ரூ.4 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பட்டா மாற்றத்துக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக பெண் கிராம நிா்வாக அலுவலா் கைது செய்யப்பட்டாா். வாணாபுரம் வட்டம், புத்திராம்பட்டு கிராமத்தில் கிராம நிா்வாக அலுவ... மேலும் பார்க்க

இலவச மனைப் பட்டா வழங்காததைக் கண்டித்து சாலை மறியல்

தியாகதுருகம் அருகே இலவச வீட்டுமனை வழங்காததைக் கண்டித்து, ஆதிதிராவிட சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள தியாகை கிராமத்த... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 3 போ் கைது; 23 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணாபுரம் அருகே போலீஸாா் வாகனத் தணிக்கையின் போது, கஞ்சா கடத்தியதாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ... மேலும் பார்க்க

மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 60 போ் சோ்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சென்னை மத்திய காலணி தொழிற்பயிற்சி நிறுவனம் சாா்பில் தொழிற்கல்வி பயிற்சிக்கான நேரடி சோ்க்கை முகாமில் 60 போ் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த தச... மேலும் பார்க்க