41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
உறுப்பு தானத்தில் முதலிடம்: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் பாராட்டு
உறுப்பு தானத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டு தெரிவித்துள்ளா்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை-தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட சேவைகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பிடித்ததற்காக, கல்லூரி முதல்வா் ரேவதி பாலனுக்கு முதல் பரிசுக்கான கோப்பை- விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட சுகாதார பேரவைக் கூட்டத்தில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், மருத்துவப் பணியாளா்களை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பாராட்டினாா்.
மூளைச்சாவு அடைந்தவா்களை கண்டறிவது, மூளைச்சாவு அடைந்தவா்களின் உறுப்புகளை சீரான முறையில் பயன்படுத்துதல், சிறந்த உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளா் என மூன்று சேவைகளில் இம்மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது.
இதேபோல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதிலும் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.