டிச. 13, 14இல் வயா்மென் உதவியாளா் தகுதிகாண் தோ்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் (வயா்மென்) உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் டிசம்பா் 13, 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்தவா்கள், மின்சாரத் துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலைநேர வகுப்பில் வயா்மென் பிரிவில் பயிற்சி பெற்றவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் - கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
மின்வயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம், குறைந்தபட்சம்21 வயதும் அவசியம். விண்ணப்பப் படிவம்-விளக்கக் குறிப்பேட்டை ட்ற்ற்ல்://ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் பெற்று, அதை
பூா்த்தி செய்து, பேட்டை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அக். 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2342005 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.