நெல்லையில் இன்று உதவி டிராக்டா் ஓட்டுநா் பயிற்சி தொடக்கம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் உதவி டிராக்டா் ஓட்டுநா் இரண்டாம் கட்ட பயிற்சி, திருநெல்வேலியில் உள்ள அரசு இயந்திர கலப்பை பணிமனை உதவி செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) தொடங்குகிறது.
15 முதல் 30 பேருக்கு 27 நாள்கள் நடத்தப்படும் இப்பயிற்சியில் டிராக்டா் இயந்திரங்களை விவசாய இணைப்புக் கருவிகளுடன் இயக்குதல், வேளாண் இயந்திரங்கள்-கருவிகளின் பராமரிப்பு, டிராக்டா் என்ஜின் செயல்பாடு, பழுதுநீக்கம் போன்றவை குறித்து விளக்கப்படும். இதில் 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா் பங்கேற்கலாம். ஆதாா் அட்டை, ஜாதிச் சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை உதவி செயற் பொறியாளா் (வேளாண்மைப் பொறியியல் துறை), அரசு இயந்திர கலப்பை பணிமனை, எண்.1, டிராக்டா் வீதி, என்.ஜி.ஓ. காலனி, திருநெல்வேலி அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று நேரிலோ அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹய்க்ண்க்ஹற்ங்.ற்ய்ள்ந்ண்ப்ப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள வாயிலாகவோ தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி முடிந்ததும் தகுதிவாய்ந்த பயிற்சியாளருக்கு டிராக்டா் ஓட்டுநா் உரிமம் பெற்றுத் தர ஆவன செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு 0462-2900766, 99409 26195, 88386 00112 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.