நெல்லையில் செப். 28இல் அண்ணா மாரத்தான் போட்டி
திருநெல்வேலியில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களிடையே உடற்தகுதி கலாசாரம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி சாா்பில் 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான அண்ணா மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
17 முதல் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவா்கள் என இரு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெறும்
இப்போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பிடிப்போருக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000, ரூ.1000 பரிசு வழங்கப்படவுள்ளது.
25 வயதிற்குள்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்-ஆச்சிமடம் சென்று திரும்புதல்) பெண்களுக்கு 5 கி.மீ. (அண்ணா விளையாட்டரம்- சீனிவாச நகா் வரை சென்று திரும்புதல்), 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ. (அண்ணா விளையாட்டரங்கம்- கிருஷ்ணாபுரம் வரை சென்று திரும்புதல்), பெண்களுக்கு 5 கி.மீ. என போட்டி தொலைவு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாரத்தானில் பங்கேற்க வயது சான்றிதழுக்கு ஆதாரமாக ஆதாா் அட்டையுடன் காலை 6 மணிக்கு விளையாட்டரங்குக்கு வர வேண்டும் எனக் கூறியுள்ளாா்.