செய்திகள் :

உற்பத்தித் துறையில் 14 மாதங்கள் காணாத வளா்ச்சி

post image

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூன் மாதத்தில் 14 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜூன் மாதத்தில் 57.8-ஆக இருந்து, ஜூலையில் 57.7-ஆகச் சரிந்தது. ஆனால், கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக அதிகரித்த பிஎம்ஐ, செப்டம்பரில் மீண்டும் 57.5-ஆக சரிந்தது.

கடந்த அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5-ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56-ஆக அதிகரித்தது. பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9-ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5-ஆகவும், பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4-ஆக இருந்தது. அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2-ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6-ஆகச் சரிந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஜூன் மாதத்தில் 58.4-ஆகக் குறைந்துள்ளது. இது, கடந்த 14 மாதங்களில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இதன்மூலம், தொடா்ந்து 48-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஜூன் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், இதுவரை இல்லாத அளவுக்கு துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்ததும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ மாதங்கள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39ஆக நிறைவடைந்தது.அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ர... மேலும் பார்க்க

நிலையற்ற தன்மைக்கு மத்தியிலும் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

மும்பை: வங்கிப் பங்குகளில் கொள்முதல் மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் முடிவடைந்தன.இன்றைய வர்த... மேலும் பார்க்க

விவோ ஃபோல்டு மொபைல் ஜூலை 14-ல் அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

விவோ நிறுவனத்தில் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 மற்றும் விவோ எக்ஸ்200 ஆகிய மொபைகளின் அறிமுக வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்... மேலும் பார்க்க

முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: ஆர்பிஐ புதிய விதிமுறை

வங்கி அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவோர், அதனை முன்கூட்டியே செலுத்தும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கும் புதிய விதிமுறையை ஆர்பிஐ உருவாக்கியிருக்கிறது.தனிநபர்கள் அல்லது தொழில் ... மேலும் பார்க்க

15,004 யூனிட்டுகளாகக் குறைந்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகக் குறைந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த ஜூன் மாதத்தில் 15,004 கோடி யூனிட்டுகளாகப... மேலும் பார்க்க