Bison: ``நீங்க ஏன் இந்த மாதிரி படம் எடுக்குறீங்க? - இது அபத்தமான கேள்வி" - மேடைய...
உலகக்கோப்பை தொடரில் விளையாட இந்தியா வந்த ஆஸி, வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை - இந்தூர் இளைஞர் கைது
நடப்பு மகளிர் உலகக்கோப்பையில் இந்தியாவில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு வீராங்கனைகள் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 2 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உட்பட 8 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்த தொடரில் ஆடுகின்றன. தாலியா மெஹ்ராத் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அந்த அணி தங்களது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்று இந்தூர் மைதானத்தில் சந்திக்கவிருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகள் கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் இந்தூரில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த வியாழனன்று மாலையில் இரண்டு வீராங்கனைகள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து அருகிலுள்ள காபி ஷாப்புக்கு நடந்து சென்றனர்.
செல்லும் வழியில் மர்ம நபர் ஒருவர் இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த வீராங்கனைகள் தங்கள் மொபைல் மூலம் அவசர செய்தியை அணி நிர்வாகத்துக்கு அனுப்பினார்கள்; அணி நிர்வாகம் வந்து வீராங்கனைகளை அழைத்து சென்றது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் அகீல் கான் என்பவரை கைது செய்துள்ளனர்.
விளையாட்டுலகமே உற்றுநோக்கும் ஒரு பெரிய தொடரில் ஆட வந்திருக்கும் வீராங்கனைகளுக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



















