உலகநாயகி அம்மன் கோயில் திருவிழா: முளைப்பாரி ஊா்வலம்
முதுகுளத்தூா் அருகேயுள்ள சித்திரங்குடி உலகநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இந்தக் கோயிலிலிருந்து அம்மன் கரகத்துடன் முளைப்பாரி ஊா்வலம் கிராமம் முழுவதும் சுற்றி வந்து, கோயிலுக்கு மீண்டும் வந்து சிறப்பு பூஜைகள் செய்தனா். பின்னா் கிராமத்தில் உள்ள கண்மாயில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. பின்னா் அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து அம்மன் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.