செய்திகள் :

உலகளாவிய புத்தாக்கக் குறியீடு: விரைவில் இந்தியா முன்னிலை- அமித் ஷா நம்பிக்கை

post image

உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

குஜராத் மாநில அரசு காந்திநகரில் நடத்தும் புத்தாக்க (ஸ்டார்ட்-அப்) மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பங்கேற்று அவர் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள "ஸ்டார்ட்-அப் இந்தியா' திட்டம் தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது. உலக அளவில் தற்போது புத்தாக்க நிறுவனங்களை அதிக அளவில் கொண்டுள்ள மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டம், நமது இளைஞர்களை வேலை தேடுவோர் என்ற நிலையில் இருந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோர் என்ற நிலைக்கு மாற்றியுள்ளது.

சமீபத்தில் உலக அளவிலான புதுமை படைத்தல் குறியீட்டு எண்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தரவரிசையில் கடந்த 2015-இல் 91-ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2025-இல் 38ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நமது மக்களின் திறனை இது காட்டுகிறது. உலக அளவில் புத்தாக்கக் குறியீட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் 10 முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கடந்த 2014-இல் நம் நாட்டில் 500 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 1.92 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசிடம் பதிவு செய்துள்ளன.

ஒட்டுமொத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 52 சதவீத நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் அமைந்துள்ளன. மொத்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 48 சதவீத நிறுவனங்கள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் 17.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆண்டுதோறும் 17,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. அவற்றில் 9,000 நிறுவனங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை நகரங்களில் அமைகின்றன.

ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தைத் தொடங்கியபோது, இத்திட்டத்துக்காக உரிய சூழல் உருவாக்கப்படாவிட்டால் இது வெற்றி பெறாது என்பதை மத்திய அரசு அறிந்திருந்தது. கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து பிரதமரின் தலைமையில் நிதி, உள்கட்டமைப்பு, கொள்கை மற்றும் வங்கி ஆதரவு ஆகியவை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ரூ.10,000 கோடி நிதி உருவாக்கப்பட்டது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டது. பல்வேறு வரிச் சலுகைகளும் அளிக்கப்பட்டன.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய தொழில்துறைத் தலைவர்கள் முன்வர வேண்டும். நாட்டின் ஸ்டார்ட்-அப் துறையில் கடந்த 4 ஆண்டுகளாக குஜராத் முன்னிலை வகித்து வருகிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அவரது அமைச்சர்கள் குழு மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து ஸ்டார்ட்-அப் புரட்சியின் மையமாக இந்த மாநிலத்தை உருவாக்கியுள்ளனர். குஜராத்தில் 16,000 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன என்றார் அவர்.

மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் ஜிஎஸ்டி சீர்திருத்தத்துக்கான பெருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளலாம்: பாஜக

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக காங்கிரஸார் கருதினால் இதற்கான பெருமையை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது.ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்கும் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் போதிய வசதியின்றி பிரசவம்: தில்லி அரசுக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

நமது நிருபர்தில்லியில் உள்ள ஐஹெச்பிஏஎஸ். மருத்துவமனையில் போதிய வசதியின்றி சிசு பிறந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணையம் (என்எச்ஆர்சி) தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்... மேலும் பார்க்க

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: அமலாக்கத் துறை மனு தள்ளுபடி

நமது நிருபர்தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்வதற்கும், அவர்களது சொத்துகளை முடக்குவதற்கும் செ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நமது நிருபர்பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து நடிகை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ள... மேலும் பார்க்க

ராணுவம், தூதரகங்களின் முத்திரையுடன் போலி ஆவணம்: கேரளத்தில் 36 சொகுசு காா்கள் பறிமுதல்

பூடானில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 36 சொகுசு காா்கள் கேரளத்தில் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களை இந்தியாவில் பதிவு செய்ய இந்திய ராணுவம், அமெரிக்கா உள்ளிட்ட... மேலும் பார்க்க

ஹரியாணா அமைச்சா் இல்ல பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா் சடலமாக மீட்பு

ஹரியாணா அமைச்சரின் குருகிராம் இல்லத்தில் உள்ள பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். உயிரிழந்த காவலா் ஜக்பீா் சிங் (... மேலும் பார்க்க