கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - நடந்தது என்ன? ஆட்சியர் வி...
உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்ட Forbes... இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
பிரபல அமெரிக்க ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் (Forbes), 2025-ம் ஆண்டின் உலகின் டாப் 10 வலிமையான நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, தலைமைப் பண்பு, பொருளாதார செல்வாக்கு, அரசியல் அதிகாரம், பன்னாட்டு உறவு, ராணுவ பலம் ஆகியவற்றின் அடிப்படையில், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ரெய்ப்ஸ்டீன் தலைமையிலான BAV குழு ஆராய்ச்சியாளர்கள், U.S. News & World Report என்ற அமெரிக்க ஊடக நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பட்டியலைத் தயாரித்திருக்கின்றனர்.
1. அமெரிக்கா (America) - மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 30.34 ட்ரில்லியன் டாலர், மக்கள்தொகை 34.5 கோடி
2. சீனா (China) - GDP 19.53 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 141.7 கோடி
3. ரஷ்யா (Russia) - GDP 2.2 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 8.4 கோடி
4. யுனைடெட் கிங்டம் (UK) - GDP 3.73 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.9 கோடி
5. ஜெர்மனி (Germany) - GDP 4.92 டிரில்லியன், மக்கள்தொகை 8.54 கோடி
6. தென் கொரியா (South Korea) - GDP 1.95 டிரில்லியன், மக்கள்தொகை 5.17 கோடி
7. பிரான்ஸ் (France) - GDP 3.28 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 6.65 கோடி
8. ஜப்பான் (Japan) - GDP 4.39 டிரில்லியன் டாலர், மக்கள்தொகை 12.3 கோடி
9. சவுதி அரேபியா (Saudi Arabia) - GDP 1.14 டிரில்லியன் டாலர். மக்கள்தொகை 3.39 கோடி
10. இஸ்ரேல் (Israel) - GDP 550.91 பில்லியன் டாலர், மக்கள்தொகை 93.8 லட்சம்
இந்தப் பட்டியலில் ரஷ்யாவின் GDP-யானது, UK, ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை விட குறைவாக இருந்தாலும் ராணுவ பலம், தொழில்நுட்ப முன்னேற்றம், மக்கள்தொகை உள்ளிட்ட காரணங்களால் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா GDP 3.55 டிரில்லியன் டாலர் மற்றும் 143 கோடி மக்கள்தொகையுடன் 12-வது இடத்தில் இருக்கிறது.