செய்திகள் :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இந்திய அணிக்கு குறைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!

இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறதா?

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த நிலையில், இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் தரையிறங்கியது. ஆனால், தற்போது ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-1 என முன்னிலையில் உள்ளதால், இந்திய அணி தொடரை வெல்வதற்கான வாய்ப்பில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டது.

இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வினை முந்திய நாதன் லயன்!

சிட்னியில் நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்து, ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழக்கும் பட்சத்தில், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் அந்த அணிக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.

சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து, இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றும் பட்சத்தில், அந்த அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு மிகவும் குறைவான வாய்ப்பிருக்கிறது.

இதையும் படிக்க: சிட்னி டெஸ்ட்டில் மிட்செல் ஸ்டார்க் விளையாடுவாரா? பாட் கம்மின்ஸ் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்க அணி, முதல் அணியாக அண்மையில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா மோதல்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. சி... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன? கௌதம் கம்பீர் பதில்!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் டெஸ்ட் போட்டி எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு ... மேலும் பார்க்க

மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது, ஆனால்.... ஜஸ்பிரித் பும்ரா கூறியதென்ன?

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் முக்கியமான தருணத்தில் விளையாட முடியாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் ... மேலும் பார்க்க

பும்ரா இல்லாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம்: முன்னாள் இந்திய கேப்டன்

இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் 200 ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையி... மேலும் பார்க்க

ஒருவர் இரட்டை சதம், இருவர் சதம் விளாசல்; தென்னாப்பிரிக்கா 615 ரன்கள் குவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 615 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ... மேலும் பார்க்க

பிசிசிஐ செயலராக பொறுப்பேற்கவுள்ள தேவஜித் சாய்கியா!

பிசிசிஐ-யின் புதிய செயலராக தேவஜித் சாய்கியா பொறுப்பேற்கவுள்ளார்.பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா, கடந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து, பிசிசிஐ-ன் அடுத... மேலும் பார்க்க