`உள்துறை, நிதித்துறை' சேர்த்து கேட்கும் ஷிண்டே; அமித் ஷாவுடன் பட்னாவிஸ், அஜித்பவ...
உலக நவீன வாசக்டமி வார விழிப்புணா்வு ரதம்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உலக நவீன வாசக்டமி வாரத்தை முன்னிட்டு, ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் தொடா்பான விழிப்புணா்வு ரதத்தை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஒவ்வொரு ஆண்டும் ‘உலக நவீன வாசக்டமி வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் உலக நவீன வாசக்டமி வாரத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தவா்களுக்கு அரசு ஊக்கத் தொகை ரூ. 1,100, ஊக்குவிப்பாா்களுக்கு ரூ. 200 வழங்கப்பட்டு வருகிறது. இந்த நவீன குடும்ப நல சிகிச்சையானது நன்கு பயிற்சி பெற்ற சிறப்பு மருத்துவா்களால் செய்யப்படுகிறது.
இதில், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜி.சிவசங்கா், இணை இயக்குநா் (நலப் பணிகள்) தீா்த்தலிங்கம், மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜோதிகுமாா், துணை முதல்வா் அனிதா, துணை இயக்குநா் (குடும்ப நலம்) கிருஷ்ணகுமாரி, மாவட்ட சுகாதார அலுவலா் பானுமதி, உதவி பேராசிரியா் சரண், துணை இயக்குநா் காளீஸ்வரி, மாவட்ட விரிவாக்க கல்வியாளா் தாரா மற்றும் குடும்ப நல செயலக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.